புதுச்சேரி மாநிலத்தில் 300 ஆண்டு கால பிரெஞ்சு வரலாற்றை பின்னணி கொண்டது.இங்கு பிரெஞ்சு மொழி என்பது பாடமல்ல,மண்ணின் கலாச்சார அடையாளம்.இன்றும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள். சி.பி.எஸ்.இ பள்ளியில் பிரெஞ்சு மொழியை முதல்/இரண்டாம் மொழியாக ஆர்வத்துடன் கற்று வருகின்றார்கள்.புதுவை மாநிலத்தில் பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் இருந்து வந்துள்ளது.பிரான்ஸ் நாட்டின் ஜன்னல் புதுச்சேரி என்று முன்னாள் பாரதபிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார்.

புதுவையில் அரசு பள்ளிகளிலும் விருப்பப்பாடமாக பிரெஞ்சுமொழி இருந்து வந்தது.புதுச்சேரி மாஹே,ஏனம்,காரைக்கால் ஆகிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவ,மாணவிகள் பிரெஞ்சுமொழி பாடத்தில் 100க்கு 100. எடுத்து சாதனை புரிந்துள்ளார்கள்.புதுச்சேரி மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் பிரெஞ்சுமொழி கற்பித்தலை பாதிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பை புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கண்டித்துள்ளார்.


இந்த அறிவிப்பால் ஏற்படும் பேராபத்துக்கள்.வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம்.ஏற்கனவே பிரெஞ்சு மொழியை முதன்மை பாடமாக எடுத்து படித்து அதையே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு ஆசிரியர்கள்,மொழிபெயர்ப்பாளர்கள்,சுற்றுலா வழிகாட்டிகள் போன்றோர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.இது நூற்றுக்கணக்கான குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும்.இளைஞர்களின் பிரான்ஸ் வாய்ப்பு பறிப்பு.புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை மற்றும் பிரான்சில் கல்வி வேலை வாய்ப்புக்கான தனிசலுகைகள் உள்ளன.பள்ளியிலே பிரெஞ்சுமொழி பயில்வது தான் இந்த வாய்ப்புகளுக்கான அடித்தளம்.

சி.பி.எஸ்.இ.இந்த முடிவு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இளைஞர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று பணிபுரியும் கனவை முற்றிலும் தகர்க்கும்.இது மாணவர்களின் மொழித் தேர்வு உரிமையை பறிப்பதுடன் புதுச்சேரியின் தனித்துவமான மரபையும், இளைஞர்களின் உலகளாவிய வாய்ப்புகளையும் சிதைக்கும் முயற்சியாகும்.இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்திற்கு விலக்கு அளித்து இங்குள்ள மாணவர்கள் தொடர்ந்து பிரெஞ்சுமொழியைக் கற்க சி.பி.எஸ்.இ அனுமதிக்க வேண்டும்.
மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மதிக்க வேண்டும்.புதுச்சேரியின் வரலாற்று கலாச்சார பின்னணியை கருத்தில் கொண்டு மொழிகொள்கையின் தனி அணுகுமுறையை சி.பி.எஸ்.இ.கடைபிடிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு தலையிட வேண்டும் ,மாநில அரசும் ,கல்வித்துறையும் உடனடியாக சி.பி.எஸ்.இ.யுடன் பேசி மாணவர்களின் உரிமையையும்,ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும் நிலைநாட்ட வேண்டும்.உலக நாடுகள் மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் போது பிரெஞ்சுமொழி ஒப்பந்தம் செய்வார்கள்.

ஒரு சொல்லுக்கு ஒரு அர்த்தம் என்ற பெருமைக்குரிய பிரெஞ்சு மொழியை புதுச்சேரி 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரெஞ்சு மற்றும் புதுவை குடியுரிமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பிரெஞ்சு மொழியை அழிக்க நினைப்பது முற்றிலும் தவறாகும்.பிரெஞ்சு அரசாங்கம் புதுவை மாநிலத்திற்கு பேரிடர் காலங்களில் பல வகையில் உதவி செய்துள்ளது.

இவை அனைத்தும் பாதிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் மூலம் எதிர்கால பிரெஞ்சு படிக்கும் மாணவர்களின் கனவுகளை நசுக்குவது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக மத்திய அரசு,புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சு பாடத்தை நீக்க நினைப்பது நிறுத்திக் கொள்ள வேண்டும்.என்று புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ தனது கண்டன அறிக்கையை தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *