செய்தியாளர் சிவ சக்தி யோகினி 9384111563
பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்;
பராபவ வருடம் 2026 சித்திரை மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது;
ஆறாம் நாள் பெருமாள் யானை வாகனத்தில் மகாராஜாவாக வரதராஜ சேவை சாதிக்கும் உற்சவம் நடைபெற்றது இந்த 6 ஆறாம் நாள் உற்சவத்தை பண்ருட்டி தாலுகா வன்னியர் ,செட்டியார்கள் சமூகம் இணைந்து நடத்தினர்.மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனையோடு பூஜை ஆரம்பித்து ஆறு மணிக்கு அருள்மிகு வரதராஜ பெருமாள் யானை வாகனத்தில் சேவை சாதித்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பெரும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை தரிசித்தனர்.