தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம், தொழில் அதிபர்வீட்டில் 25 கிலோபித்தளை பாத்திரங்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம், பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை – ரவுண்டான டானா பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33). தொழில் அதிபர். இவர் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தாயாருடன் கோவை சென்று விட்டார். பின்னர் 25-ந் தேதி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. வீட்டின் வராண்டாவில் காலி மதுபாட்டில் கள்கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் இருந்த டி.வி., பித்தளை பொருட்கள், சிலிண்டர், பட்டுப்புடவை, மோட்டார் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து, அவர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புகேமரா – காட்சிகளை ஆய்வு செய்தனர் மேலும் போலீசார் பழைய இரும்பு வியாபாரிக் 3 பேர்களிடம், விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் தாராபுரம் சோளக்கடை /வீதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்ற7 /பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
7பேர் கைது
விசாரணையில் அவர்கள் தாராபுரம் நேரு நகரில் வசித்து வரும் பழனியை சேர்ந்த கோகுல் பிரசாத் (40), தாராபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம் (23), பிரகாஷ் (33), சிவலிங்கம் (59), முத்துக் குமார் (36), ரவி (43), சலீம் (33) என்பது தெரியவந்தது. /இவர்கள் அனைவரும்ராமச் சந்திரன் வீட்டில் 3 முறை /சென்று பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்ட னர் இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்தனர். பின்னர் இருந்து 25 கிலோ எடை யுள்ள பித்தளை பொருட் கள்,எல்.இ.டி டிவி., கியாஸ் /சிலிண்டர், ஸ்டவ், பழைய மோட்டார் மற்றும் பட்டுப் புடவைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அனைவரும் தாராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கோவை கப்பட்டனர். இதில்,பிரகாஷ், கோகுல், ஜீவானந்தம் ஆகியோர் மீது தாராபுரம் மற்றும் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.