கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புளுக்கான நிகழ்ச்சியாக நடைபெறும் இதில் பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பங்கேற்பு
கோவையில் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து, .சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 எனும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் மே 2 ந்தேதி நடைபெற உள்ளது கோவை ரேஸ்கோர்ஸ் சி.எஸ்.ஐ.ஆல் சோல்ஸ் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ள இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சி.எஸ்.ஐ.கோவை திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்றது..
இதில் கோவை ,நீலகிரி,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சி.எஸ்.ஐ. கோவை திருமண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின்,செய்தியாளர்களிடம் பேசினார் உடன்,பொருளாளர் அமிர்தம்,மற்றும் கல்வி வழிகாட்டியின் ஒருங்கிணைப்பாளரும்,ஊட்டி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியின் இயக்குனருமான அருமை ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்..
வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், UG படிப்புகளை தேர்வு செய்ய உள்ளவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான முழுமையான வழிகாட்டும் தளமாக இது அமையும் என பேராயர் கூறினார்..
இதில்,கோயம்புத்தூர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் சி.எஸ்.ஐ கல்வி நிறுவனங்கள், கோவை,, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக தெரிவித்தார்..
இந்த நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 1500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர் குறிப்பாக பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உரையாட உள்ளதாக அவர் தெரிவித்தார்..
மாணவர்கள் தங்களது திறன், விருப்பம் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு சரியான கல்வித் துறையை தேர்வு செய்ய உதவும் வகையில் இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்..