சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக நீதிக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர். ஜி முகமது ரஃபிக்.வெளியுட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்,உலகமெங்கும் உள்ள தொழிலாளர்களின் வாழ்வில் உயரம் பெற இந்த மே தினத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்..

தொடர்ந்து அவர்,, மத்திய மாநில அரசுகள் தொழிலாளர் விரோத சட்டங்களையும் நலவாரிய தொழிலாளர்களுக்கு ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போன்ற செயல்பாட்டை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டில் 18 வகையான அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் இருக்கின்றது இதில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டும் பாதுகாப்பு நிதி வருவாய் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் மற்றும் பண பலன்கள் விரைந்து கிடைக்கிறது இது ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது..

மற்ற 17 வகையான நலவாரிய தொழிலாளர்களுக்கு பாதித் திட்டங்கள் கூட கிடைப்பதில்லை உதவித் தொகை மற்றும் பணப்பலன் கிடைப்பதில் தாமதம் ஆவதால் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்

இதற்கு நிரந்தர தீர்வு காண 18 வகையான நல வாரியங்களுக்கும் நிரந்தர நிதி ஆதாரத்தை உருவாக்கி ஒரே வகையான நலத்திட்டங்கள் வழங்கிட வழிவகை ஏற்படுத்த வேண்டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற தொழிலுக்கேற்ப தொழில் இயந்திரம் வழங்கினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் மேலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை கிடைக்கும்.

கோவையில் அண்மையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் வைத்த கோரிக்கைகளில் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ் நாடு அரசுக்கு நன்றி இது போல் மேலே குறிப்பிட்ட சில முக்கியமான கோரிக்கைகளையும் நிறைவேற்றிட 2026 மேதினத்தில் தொழிலாளர்கள் சார்பாக அரசை வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் 1446 விதிகள் 44 சட்டங்களாக சுருக்கி நாலு கோடுகளாக 356 விதிகள் தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது..

தொழில் நிறுவன முதலாளிகளுக்கு சட்டபூர்வமான தண்டனை இல்லாமல் அபராதம் மட்டுமே உள்ளதால் தொழிலாளர்களுக்கு எதிரான விரோத போக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது மாநில நல வாரியங்கள் கலைக்கப்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது இந்த அச்சுறுத்தலை தவிர்க்க பழைய சட்டத்தையே நடைமுறைப்படுத்தி புதிய சட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *