திருவண்ணாமலை பக்தர்களுக்கு ஜாக்பாட் ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு : நரசாபூர் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் நிரந்தர எக்ஸ்பிரஸாக மாற்றம்! ஆம் ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு!
ஆந்திர மாநில ஆன்மிகப் பயணிகளும் தமிழக டெல்டா,வட மாவட்டப் பக்தர்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நரசாபூர் – திருவண்ணாமலை இடையே தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை, தற்போது 17291 / 17292 நரசாபூர் – திருவண்ணாமலை – நரசாபூர் ரெகுலர் எக்ஸ்பிரஸ் ரயிலாக அதிகாரப்பூர்வமாக நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஆன்மிகத் திருத்தலத்திற்கு ஆந்திர மாநிலத்திலிருந்து இயக்கப்படும் முதலாவது பிரத்யேக மாநிலங்களுக்கு இடையேயான (Dedicated Inter-State) தினசரி/வாராந்திர எக்ஸ்பிரஸாக இது தடம் பதிக்கிறது.
ரயிலின் கால அட்டவணை மற்றும் இயக்க நாட்கள் (Train Timings & Frequency):
இந்த ரயில் வாரத்திற்கு ஒருமுறை (Weekly) இருமார்க்கத்திலும் பின்வரும் அட்டவணைப்படி இயக்கப்படும்:
ரயில் எண்: 17291 நரசாபூர் ➔ திருவண்ணாமலை எக்ஸ்பிரஸ் (ஒவ்வொரு புதன்கிழமை):
நரசாபூரில் இருந்து மதியம் 13:00 (புதன்) மணிக்கு புறப்படும்.
காட்பாடிக்கு நள்ளிரவு 02:25 / 02:35 மணிக்கு வந்து சேரும்.
திருவண்ணாமலையை வியாழக்கிழமை அதிகாலை 04:55 (வியாழன்) மணிக்குச் சென்றடையும்.
ரயில் எண்: 17292 திருவண்ணாமலை ➔ நரசாபூர் எக்ஸ்பிரஸ் (ஒவ்வொரு வியாழக்கிழமை):
திருவண்ணாமலையிலிருந்து காலை 11:00 (வியாழன்) மணிக்கு புறப்படும்.
காட்பாடிக்கு மதியம் 13:10 / 13:15 மணிக்கு வந்து சேரும்.
நரசாபூரை வெள்ளிக்கிழமை அதிகாலை 05:50 (வெள்ளி) மணிக்குச் சென்றடையும்.
முக்கிய நிறுத்தங்கள் (Commercial Stoppages):
தமிழகப் பகுதியில் இந்த ரயில் காட்பாடி (Katpadi) மற்றும் வேலூர் கேண்டோன்மென்ட் (Vellore Cantonment) ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
ஆந்திரப் பகுதியில் பாலக்கொல்லு, வீரவாசம், பீமாவரம், பீமாவரம் டவுன், அக்கிவீடு, கைகலூர், குடிவாடா, விஜயவாடா, தெனாலி, பாபட்லா, சீராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய முக்கிய நகரங்களை இந்த ரயில் இணைக்கிறது.
ரயிலின் பெட்டிகள் விவரம் (Coach Composition):
மொத்தம் 24 பெட்டிகளைக் கொண்டு இந்த ரயில் மிக பிரம்மாண்டமாக இயக்கப்பட உள்ளது:
2-Tier AC (ACCW) – 1
3-Tier AC (ACCN) – 3
Sleeper Class (GSCN) – 14
General Second Class (GS) – 4
SLR/SLRD (Luggage cum Brake Van) – 2
பௌர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதி நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களுக்கு இந்த நிரந்தர ரயில் சேவை மிகச் சிறந்த பாதுகாப்பான பயண வாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை!
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவ சக்தி யோகினி.