நீடாமங்கலம்., மே 25

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கடத்த வாரம் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது.

கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று தீட்சிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வந்து கும்பம் மற்றும் சுவாமி மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்று.

தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மகா காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஓடத்துறை , கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *