ஜூன்.09.
நாமக்கல்

நாமக்கல்:ஊர்வலமாக சென்று மாவட்ட பாஜகவில் அலுவலகத்தில் கூண்டோடு ராஜினாமா…மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்… மன வருத்தத்துடன் விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவதாக பேட்டி.,

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி தலைமைத்துவ இயக்கம் மூலமாக தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில்,நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய மாவட்ட மாநில நிர்வாகிகள் சுமார் 40 மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக ஊர்வலமாக சென்று கடிதத்தை நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாற்றம் ஒன்றே நிலையானது என்று பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை பாதையில் செல்கிறோம் என்றும் நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்வதற்கு அனைவரும் செல்வதால் என்னுடைய பாஜக பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் பிரச்சார பிரிவு ஆன்மீக பிரிவு ராணுவ பிரிவு கிளைத் தலைவர்கள் சக்தி கேந்திரம் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து தலைமைத்துவ இயக்கத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர். அண்ணாமலை கூறியது போல அனைவரும் தலைவர்கள் தான் என்று கூறி இயக்கத்தில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *