ஜுன்.09.
நாமக்கல்.

.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பட்டணம் சாலையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மருத்துவமனை செயல்பட்டு வருவதுடன், சுமார் 300 மீட்டர் தொலைவில் வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த கடைகளில் மது அருந்திவிட்டு ரகலையில் ஈடுபடுவதால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனை மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இயங்கி வரும் இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *