ஆண்டிபட்டி அருகே பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கான உறைவிடப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா திம்மரசநாயக்கனூரில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் இளம் பேரிடர் நண்பன் தன்னார்வலர்களுக்கான யுவ ஆப்தமித்ரா உறைவிடப் பயிற்சி ஒரு வார கால பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் சான்றிதழ் வழங்கினார் இந்த நிகழ்வில் கல்லூரி துறை சார்ந்த இருபால் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்