திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் தவெக மாவட்ட செயலாளர் (கிழக்கு) உதயகுமார் வழிகாட்டுதலின்படி நகர செயலாளர் (கிழக்கு) ராஜேஷ் ஏற்பாட்டில், சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்வில் நிர்வாகிகள் தேவி, சஹானா, சத்யா, தீபா, நதியா, ரஷீத், விக்கி, ஜல்லி குமார், இளவழகன், மேகநாதன், இளையராஜா, கில்பா, சந்தானம் அன்பு கண்ணன், ஜெயவர்த்தனன், யுவராஜ், சுதர்சன், புவனேஷ், பிரவீன் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.