கோவையில் நடைபெற்ற யோகா மாரத்தான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு
கோவையில் நானா யோகா ஸ்டுடியோ சார்பில் நடத்தப்பட்ட “யோகா மாரத்தான்” நிகழ்ச்சி உலக அளவில் புதிய சாதனையை படைத்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
உடல் நலம், மனநலம் மற்றும் யோகாவின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே பரப்பும் நோக்கில் நடைபெற்ற இந்த யோகா மாரத்தான் நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான யோகா ஆர்வலர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்றனர்.
தொடர்ச்சியான யோகா பயிற்சிகள், பல்வேறு யோகாசனங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..
இந்த சாதனையின் மூலம் இந்தியாவின் பாரம்பரிய யோகா கலையை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் வகையில் நடைபெற்றதாக யோகா பயிற்சியாளர் ஜெயராமன் தெரிவித்தார்..
மேலும் யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல; ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முழுமையான வழிமுறை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த உலக சாதனை முயற்சி நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்..