கரூர் செய்தியாளர் மரியான் பாபு
ஸ்ரீ சமயபுரத்து மஹா பொட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..
கரூர் மாவட்டம், அரசு காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மஹா பொட்டு மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதையொட்டி முதல் நாள் காலை மோகனூர் காவிரி ஆற்றிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட தீர்த்தக் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு வாங்கப்பாளையம், அருகம்பாளையம், அரசு காலனி, தங்கராஜ் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க பக்தி பாடல்களுடன் உற்சாகமாக ஊர்வலம் அரசு காலணி கோவிலில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து முதல் காலை பூஜையும் இரண்டாம் கால பூஜைகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்பு கருட பகவான் வலம் வந்து அம்மனுக்கு உயிர் கொடுத்து சிறப்பு அபிஷேகம் கலசத்திற்கு புனித நீராடினர்.கோயில் சிறப்பு அர்ச்சகர் மற்றும் நிறுவனர் சுரேஷ் குமார் பூர்ண கும்பம் மரியாதை செலுத்தினார்கள்.அதனையடுத்து பொதுமக்களுக்கு தீர்த்தம் தெளித்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரளாக கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.