ஈரோடு மாவட்டம், அந்தியூரில் முதல்வர் விஜய் பிறந்தாள் விழா, த.வெ.க., வினரால் கொண்டாடப்பட்டது.அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் நலமுடன் வாழ, கட்சி சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.அந்தியூர் அரசு மருத்துவமனையில் பேரூர் செயலாளர் ஹரி பெருமாள் தலைமையில், த.வெ.க.,வை சேர்ந்த 52 பேர் ரத்ததானம் செய்தனர். டாக்டர்கள் பிரகாஷ், கவிதா, மோகன்குமார், வேல்நம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அந்தியூர் அரசு மருத்துவமனையில், ஒரு வாரத்தில் பிறந்த 10 குழந்தைகளுக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் வெங்கடேஷ், 10 ஆயிரம் பணம் மற்றும் சோப்பு, பவுடர் வழங்கினார்.
மேலும், 10 குழந்தைகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய், ஐ.ஓ.பி., வங்கியில் டெபாஸிட் செய்து, 18 ஆண்டுகளுக்கு பின் பயனடையும் வகையில் சொந்த பணம் வழங்கவுள்ளார்.


அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் முன், பொதுமக்கள் என, 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *