திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு.
திருவாரூர்., ஜூன்.25
திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள அஞ்சுகம் அரங்கில் திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார் தொடர்ந்து முக ஸ்டாலின் பேசியபோது தெரிவித்ததாவது… நேற்று முன்தினம் கூட நீங்க எல்லாம் டிவியை பார்த்திருப்பீங்க ஒரு காட்சி நடந்துச்சு அதை பற்றி எல்லாம் நம்முடைய முத்தரசன் அவர்களும் குறிப்பிட்டு சொன்னார்.
மற்றவர்கள் எடுத்து சொல்லி இருக்காங்க நாட்டில் எத்தனையோ ஏராளமான பிரச்சனைகள் இருந்து கொண்டு உள்ளது ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சனை, இன்னொரு பக்கம் டெல்டா மாவட்டத்துல விவசாயிகளுக்கு நேரத்திலே தண்ணீர் திறந்து விட முடியல அப்படிங்கற சூழ்நிலையில் நீங்க ஒன்னு என்னையும் பார்க்கணும்.
2021க்கு பிறகு அஞ்சு வருஷம் ஆட்சி நடைபெற்ற போது ஒவ்வொரு ஆண்டும் சரியான நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நாம் மேட்டூர் அணை திறந்து வைத்திருக்கிறோம். அதுதான் நம்முடைய ஆட்சி. ஆனால், இதையெல்லாம், எடுத்து சொல்லி, எதிர்கட்சி தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய உதயநிதி அவர்கள் விளக்கமா, விரிவா சட்டமன்றத்தில் பேசி இருக்கக்கூடிய சூழ்நிலை எல்லாம் எடுத்து சொல்லி அதன் மூலமாக முதலமைச்சர் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் சட்டமன்றத்திலே முதலமைச்சராக இருக்கக்கூடியவர் என்ன பதில் சொன்னார் எங்கே காணும் உங்க அப்பாவை காணும் இதை சொல்லி இருக்கிறார். அப்பாவை அங்க தேடாதீங்க மக்கள் மனசுலதான் பதிந்து இருக்கிறார். நீங்க தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமா நான் இருப்பேன்.
சட்டமன்றத்தில நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னைக்கு நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன் என்பதை மாத்திரம் சொல்லி கொள்கிறேன். நான் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 60 வருஷம் ஆகி இருக்கு. ஆக 60 வருஷமா மக்களோடு மக்களாக தான் இருந்து கொண்டிருக்கிறேன்.
ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் என்பதை இந்த நேரத்தில் எடுத்து சொல்லி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் முதலமைச்சராக இருந்தபோது நாலு ஐந்து முறை தொடர்ந்து ஆய்வு நடத்தி இன்னும் சொல்றேன் நான் முதலமைச்சரா இருந்த போது ஐந்து வருஷத்துல நான் நடத்துன மாதிரி ஆய்வு கூட்டம் .
எந்த முதலமைச்சரும் நடத்த மாட்டாங்க, நான் பயணம் செஞ்ச மாதிரி எந்த முதலமைச்சரும் பயணம் செஞ்சிருக்க மாட்டாங்க . நீங்க முதலமைச்சர் தேடி பார்க்கணும்னா இன்னைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் கேட்டுக்கொள்ள கோட்டையிலதான் கோப்புகள் எல்லாம் இருக்கிறது ஆக கோப்பு எடுத்து போடாதீங்க அதை கையெழுத்து போட்டுருப்பார் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் அதை கையெழுத்து பார்க்க அவசியமே இல்லை தேடி பார்க்கணும் அவசியமே இல்லை.
அந்த கையெழுத்தை பாருங்க அது தெரியும்
உங்களுக்கு மகளிருக்கு கலைஞர் உரிமை துறையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அங்க ஸ்டாலின் புதுமை பெண்கட்டத்தின் மூலமாக மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அத பாருங்க அதுலயும் முக்கியம் தமிழ் புதல்வன் திட்டம் ரூபாய் 1000 அதுல ஸ்டாலின் கொடுப்பாங்க நாங்க எங்கேயும் தேடிட்டு இருக்க அவசியமே இல்லை கோட்டையிலே இருக்கிறேன்.
அண்ணா சொல்கிறேன் என்று ஒன்று சொன்னார் அண்ணா சொன்னார் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயரை சூட்டி இருக்கிறேன் இது போதும் எனக்கு என் வாழ்க்கையில நான் ஆட்சியில இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு என்று பேசுவதற்கு என் பெயர் இருக்கும்னு சொல்லி இருக்கிறாரு.
அது மாதிரி மகளிர் உரிமை தொகை இருக்கிற வரைக்கும் இந்த ஸ்டாலின் தான் இப்படி சொல்லிட்டே இருக்கலாம் . இங்க நம்முடைய மதிப்பிற்குரிய சகோதரர் ஆ. ராஜா அவர்கள் பேசுகிறபோது ஒன்றை சொன்னார்கள். கூட்டணியை பற்றி எல்லாம் எடுத்து சொன்னார்கள்.
எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி கூட்டணியில் இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார். அவங்களாக போனாதான் உண்டு தற்போது அவர்களாக போனால் அதற்கு நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. இப்ப இருக்கிற மக்கள் எல்லோரும் கூட்டணி தேவையில்லை என்று கூறுகிறார்கள். அதையும் விரைவில் பரிசீலிப்போம் என்பதை குறிப்பிடுகிறோம் என பேசினார்.