கும்பகோணம் :அரசினர் மகளிர் கல்லூரி, போதை ஒழிப்பு மன்றம் ஆகிய இணைந்து நடத்தியஉலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. அகிலா தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக. மதுவிலக்கு அமுல் பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ் , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ரொசாரியோ, ஆகியோர் கலந்து கொண்டு, போதை பொருள் தடுப்பு மற்றும் தற்காப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தார்கள்.
கும்பகோணம் மது விலக்கு அமல் பிரிவு காவலர்கள் சேவியர் அந்தோணிசாமி , அய்யப்பன்
திருமதி.பிரியதர்ஷினி , கும்பகோணம் ரெட் கிராஸ் நிர்வாகிகள் ராமதாஸ், பத்மநாபன், சிவக்குமார் மற்றும் 250-க்கும் மேற்பட்ட கல்லூரியின் மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை
கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், முனைவர்கள் . ஞானஷீலா ,. தமிழ்மதி,. பவானி,
ஆகியோர் செய்தார்கள்.
மாணவிகள் அனைவரும் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
.