கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்ப தான்தோன்றி மலை பகுதியில் ஜே ஜே நகர் குடியிருப்பு நலச் சங்கம் மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோதிபாசு மாவட்ட செயலாளர் CPI (M)
கலந்து கொண்டு உரையாற்றினார்.


தான்தோன்றி மலை ஜே ஜே நகர் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் புலன் எண் 297 உள்ள 6.45 ஏக்கர் நிலத்தில் முறைப்படி பத்திரப்பதிவு செய்து கரூர் மாநகராட்சி வரி விதிப்பு செய்து மின்னிணைப்பு பெற்று குடும்பங்களுக்கு பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர் பலமுறை நிலம் விற்றும் வாங்கியும் வந்துள்ளனர் தாந்தோணி மலை அருள்மிகு கல்யாண வெங்கடா ரமண சுவாமி திருக்கோவிலுக்கு திருமலை கமிட்டி ஊழியத்திற்கு வழங்கப்பட்ட இனாம் நிலம் என்று சொல்லி கோயில் நிர்வாகம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேற்கொண்ட சர்வே எண் உள்ள இடத்தை பத்திர பதிவு எதுவும் செய்ய வேண்டாம் என்று கட்டளை செய்துள்ளது.எனவே தாங்கள் தலையிட்டு பத்திரப்பதிவு நடைபெற உத்தரவிட வேண்டும் சொந்த வீட்டில் குடியிருப்பவர் தொந்தரவு செய்யக்கூடாது பாதுகாப்பான வழிவகை செய்ய வேண்டும் என்று நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு தபால் மூலம் புகார் மனு அளித்தோம்,இந்து அறநிலைத்துறைக்கு அமைச்சருக்கு கோரிக்கை வைத்தோம்,
அதனைத் தொடர்ந்து 25.06.26 இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளோம் தமிழ்நாடு அரசு உரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *