தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் காவலர்கள் பேரணி நடைபெற்றது.

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சிருஷ்டி சிங். தலைமையில் பேரணி போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் ஆணைக்கிணங்க போதை ஒழிப்பு பேரணி மதுவிலக்கு காவல்துறை தாராபுரம் காவல்துறை இணைந்து பேரணி நடைபெற்றது.

இதில் தாராபுரம் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம். விவேகம் பள்ளி சுப்பிரமணி. சூர்யா பேக்கரி முருகேஷ் சாரதா சண்முகம். வழக்கறிஞர் தென்னரசு. கலந்துகொண்டு பேரணியை துவங்கி வைத்தார் இதில் கொங்கு நாடு கூடைப்பந்து வீரர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் இந்த பேரணி தாராபுரம் காவல் நிலையத்திலிருந்து பூக்கடை வழியாக நடைபெற்று இறுதியாக ஜின்னா மைதானம் கூடைப்பந்து மைதானத்தில் முடிவடைந்தது

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் மது போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. சாலை விதிமுறைகளைப் பின்பற்றி இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் செல்போன் வைத்து ஓட்டக்கூடாது போன்ற கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்

திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவு கஞ்சா விற்பனை உள்ளதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் குறுஞ்செய்தி மூலம் போதை ஒழிப்பு நம்பர் உள்ளது அதை பயன்படுத்த வேண்டும் அனைவருக்கும் அதை தெரியப்படுத்த வேண்டும் என்று காவலருக்கு உத்தரவிட்டார் இந்த குறுஞ்செய்தி ஆப்பை பற்றி காவல்துறையினர் அனைத்து பொது மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *