அலங்காநல்லூர்.
ஜூன்.27.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்ட கடை ராசுஆசாரி திருமண மண்டபத்தில்தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தவெகநிர்வாகியும் தொழிலதிபருமான விக்னேஷ், ஏற்பாடு செய்திருந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, கலந்து கொண்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை, மரக்கன்று, மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானமும் வழங்கினார்.
முன்னதாக இவ்விழாவுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களை மேளதாளங்கள் வான வேடிக்கையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ் நகர செயலாளர் தளபதி ரஞ்சித், பேரூராட்சி முன்னாள் தலைவர் கீதாபாலாஜி,வடக்கு ஒன்றிய நிர்வாகி தனசேகர், இணைச்செயலாளர் ராமநாதன், தொழிலதிபர்கள் பி.வி.பிரசாத்,பிரதீப்,நிர்வாகிகள் ஆர்த்தி வெங்கடேசன்,சரத்குமார்,ராஜாமுனி,அய்யங்காளை,பூச்சிராஜா,கண்ணன்,
உள்பட பலர் கலந்து கொண்டனர்.