பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம்
இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI FLO) கோவை கிளையின் சார்பில், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘புளோ பஜார் 2026’ கண்காட்சி, ஜூன் 26-ஆம் தேதி துவங்கி ஜூன் 27 ந்தேதி இரண்டு நாட்கள் கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது..
பிக்கி புளோ கோவை கிளையின் முதன்மை நிகழ்வாக நடைபெறும் இந்தக் கண்காட்சி, 11-ஆவது ஆண்டாக நடத்தப்படுகிறது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தொழில்முனைவோர், சுய உதவிக்குழுக்கள் மற்றும் அடிமட்டத் தொழில் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில் முயற்சிகளை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைகிறது.
இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன..
பெண்களின் தொழில்முனைவு வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் பிக்கி புளோ தொடர்ந்து வழங்கி வரும் ஊக்கத்தை இந்தக் கண்காட்சி பிரதிபலிப்பதாக பக்க புளோ கோவை கிளை சேர்பெர்சன் பர்னிகா குப்தா தெரிவித்தார்..