தேனி, ஜூன் 26:
உலக போதைப் பொருள் தடுப்பு சர்வதேச நாளை முன்னிட்டு, “Start Run – Stop Drug (Anti Drug Run 2026)” என்ற தலைப்பில் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு ஓட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று, போதைப் பொருட்களுக்கு எதிரான சமூக விழிப்புணர்வை வலியுறுத்தினர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.


போதைப் பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *