கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் N. ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் S. பாபு அவர்களின் தலைமையில் இன்று சர்வதேச உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் மிக பிரம்மாண்டமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “START RUN, STOP DRUGS” (ஓட்டத்தைத் தொடங்கு, போதையை நிறுத்து) என்ற கருப்பொருளில் இளைஞன் ஒருவன் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போன்ற பிரம்மாண்ட மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. சமூக ஆர்வலர் U.M.T. ராஜா, செந்தில் நவீன், பாலா மற்றும் சம்சுதீன் ஆகியோர் இணைந்து இந்த அரிய மணல் சிற்பத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்து பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திரளான பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி கோவையில் பெரும் வரவேற்பைப் பெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *