முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கல்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி 43-வது வார்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மை மற்றும் உழவர் நலன் பாதுகாப்புத் துறை அமைச்சருமான வினோத் ரவி அவர்களின் ஆலோசனையின்படி, மாவட்டப் பொருளாளர் விஜய் சந்திரன், மாநகரச் செயலாளர் முருகானந்தம் ஆகியோரின் வழிகாட்டுதலிலும், பகுதிச் செயலாளர் சரவணன் மேற்பார்வையிலும், 43-வது வார்டு செயலாளர் ஜோ. பூபாலன் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
43-வது வார்டு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வார்டு மக்களுக்கு என 300-க்கும் மேற்பட்டோருக்கு சில்வர் குடங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.