மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர், சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடு தல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணி யாற்றிய ராஜேந்திரன், மதுரை மாநகர ஆணையராக நியமிக் கப்பட்டார். இந்தநிலையில், அழகர்கோவில் சாலையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய காவல் ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர், 1998-ம் ஆண்டு குரூப்-1 தேர்வின் மூலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக, காவல்துறையில் பணியை தொடங் கினார். அதன்பின்னர், 2007-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். அதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அந்தஸ்து பெற்று, 2019-ம் ஆண்டுசென்னை மாநகர பூக்கடைதுணை ஆணையராகவும், 2020-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, மதுரை சரக டி.ஐ.ஜி.யாகவும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷன ராகவும் பணியாற்றினார். 2024-ம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார். அவருக்கு, துணை கமிஷனர்கள் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் வாழ்த்து கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *