காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.!
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தாராபுரம்–காங்கேயம் சாலையில், ஊதியூர் அருகே அமைந்துள்ள குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், 4-வது மண்டலத் தலைவருமான திருப்பூர் மாநகராட்சி உறுப்பினர் இல. பத்மநாதன் தலைமை தாங்கினார்.
விழாவில் குண்டடம் கிழக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் எஸ். சிவப்பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, கழக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் மேலும், கார்த்திகேய சிவ சேனாதிபதி, கழக மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என். கயல்விழி செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சத்யா பழனிக்குமார் மற்றும் எஸ். கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.