தமிழ்நாடு அரசின் “போதை இல்லாத தமிழ்நாடு”என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பாரதி மருத்துவமனை மற்றும் சைமா அமைப்பின் சார்பில் மாபெரும் மனிதச் சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளி 10,11,12 வகுப்பு பயிலும் மாணவர் கள் சுமார் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பதாகைகளைக் கைகளில் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
இந்த நிகழ்வில் பொறுப்புத் தலைமை ஆசிரியர் அறிவழகன் கலந்து கொண்டார்.
போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் கார்த்திக்,
மாணவர்களை ஒருங்கிணைப்புச் செய்தார்.
ஆசிரியர்கள் குமரேசன், வீரக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.