மன்னார்குடி., ஜூன். 26
திருவாரூர் மாவட்டம் இராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 5ம் தினமான அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
தெப்பக்குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் அனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமர் ஆக இராஜகோபால சுவாமி எழுந்தருளி அருள் பாலித்தார் ராமர் அலங்காரத்தில் தனக்கு மிகவும் பிரியமான அனுமன் மீது அருள் பாலித்த ராஜகோபால சுவாமியை ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து தெப்பக்குளத்தில் நான்கு கரைகள் வழியாக வீதி உலா நடைபெற்றது வழியெங்கும் பக்தர்கள் தீப ஆராதனை எடுத்து வழிபட்டனர்.