கோவை,
கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அரசு உயர் நிலை பள்ளியின் 50 ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. பொன்விழாவை அடுத்து 50வது ஆண்டு நுழைவு வாயில் திறப்பு விழா, கலையரங்கம் திறப்பு விழா, பொன்விழா நினைவு பூங்கா, மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொன்விழாவில் நிதி உதவி வழங்கிய சான்றோர், ஆன்றோர் பெருமக்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் மரம் மனிதர் விருது பெற்ற பணி நிறைவு பெற்ற அரசு நடத்துனர் யோகநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் முன்னாள் மாணவர் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.