திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுமார் 300 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்னை
க.மாரிமுத்து.