நீடாமங்கலம்., ஜூன் 26

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி வடக்கு தெருவில் இரவு நான்கு மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீடாமங்கலம் பகுதியில் மழை காற்று என எந்த வித இயற்கை சீற்றங்களும் இல்லாத போதிலும் மின்கம்பங்கள் திடீரென விழுந்ததற்கு காரணம் பராமரிப்பு இன்றி மின்கம்பங்கள் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒளிமதி கிராமத்தில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூற முற்பட்டபோது அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இருப்பினும் பொதுமக்களே அறுந்து விழுந்த மின் ஒயர்களை மின்கம்பங்களையும் அப்புறப்படுத்தினர். இரவு திடிரென விழுந்த இத்தகைய மின்கம்பங்களால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாத போதிலும் இச்சம்பவங்கள் தொடர்கதையாக இல்லாமல் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *