மேயர் ஜெகன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது அதன்படி 5 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு இன்றைய சொட்டு மருந்து முகாமில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியின் கீழ் ஏழு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது ஆரம்ப சுகாதார நிலையம் 14 நகர்ப்புற நல வாழ்வு மையம் 37 நகர்ப்புற துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற அங்கன்வாடி மையம் அதுபோல மாநகராட்சி பேருந்து நிலையங்கள் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது

அதுபோல மற்ற மாநகராட்சி அரசு அலுவலக வளாகங்கள் என மொத்தம் மாநகர் பகுதியில் அறுவது வார்டுகளிலும் 127 மையங்களில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து என்று கொடுக்கப்பட்டு வருகிறது மாநகர் பகுதியில் 34 ஆயிரத்து 539 குழந்தைகளுக்கும் அதுபோல வெளியூரிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் வந்து செல்லும் குழந்தைகள் என அனைவருக்கும் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி மேயர் ஜெகன் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து துவைக்க வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். மாமன்ற உறுப்பினர்கள் தேவேந்திரன். அந்தோணி மார்சலின் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொது சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் அலுவலர்கள் தனியார் செவிலியர்கள் உள்ளிட்ட 54 நபர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பணியாற்றி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *