செங்குன்றம் செய்தியாளர் ஜூன் 28

தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் பொதுமக்கள் 552 பேருக்கு சமபந்தி விருந்து மற்றும் ரத்ததானம், கண்பரிசோதனை முகாமை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். பிரபு துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம், மாதவரம் மேற்கு பகுதி 30 வது வட்டம் கல்பாளையம்,விநாயகபுரம், கடப்பா ரோடு, ரெட்டைஏரி பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகர் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு சமபந்திவிருந்து மற்றும் பொதுமக்களுக்கு பொது மருத்துவ முகாம் கண் சிகிச்சை, ரத்ததான முகாம் , போலியோ சொட்டு மருந்து முகாம் இலவசமாக நடைபெற்றது.

மாதவரம் மேற்குப் பகுதி செயலாளர் ஜி. பிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பகுதி இணைச் செயலாளர் ஜி. முரளி பொருளாளர் ஆர். பிரேம்குமார், எம் ராஜேந்திரன், கார்த்திகா, சுரேஷ்,பிரகாஷ், மோகன்,தண்டபாணி,வினோத், பாண்டுரங்கன்,கிஷோர், சந்துரு, மதிமாறன், கார்த்திக் உட்பட நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *