கம்பம் அருகே எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்ஜை திறந்து வைத்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர் பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா திறந்து வைத்தார் தமிழ்நாட்டின் மிக அகலமான ஸ்கேட்டிங் ரிங் 7.3. மீட்டர் மற்றும் முற்றிலும் குளிர் சாதன வசதியுடன் உலக தரத்தில் அமைக்கப்பட்ட மரத்தாலான பூப்பந்து மைதானம் இளைஞர்களின் புதிய வரவாக பிக்கின் பால் அரங்கம் தேனி திண்டுக்கல் இடுக்கி மாவட்டங்களில் முதன் முறையாக ஒரே ஒரு 200 மீட்டர் சர்வதேச தரத்திலான சலுக்கு தளம் உள்பட பல்வேறு விதமான சிறப்பு அம்சங்
களுடன் கூடிய எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் திறப்பு விழா கோலகாலமாக நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேனி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே ஆர் ஜெய பாண்டியன் தலைமை வகித்தார் இந்த விழாவில் கம்பம் நகரின் முக்கிய பிரமுகர்கள் விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்