அச்சிறுப்பாக்கம், ஜூன் 28:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2001–2002 ஆம் கல்வியாண்டில் முதல் பிரிவு கணிதம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் வெள்ளி விழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான அதிநவீன ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது. புதிய ஸ்மார்ட் போர்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.த. விஜயகுமார் மற்றும் மு. தணிகைவேல் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், பள்ளி வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்களிக்க உறுதியேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *