தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சொந்த வேலையாக நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என தினமும் வெளியூர்களுக்கு படிக்கச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காந்தி பூங்கா அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் 5 ஆண்டுக்கு முன்பு முன்னாள் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் அவர்களின் நிதியில் நிறுவப்பட்ட ஒரு நிழல் குடை ஒன்று இருந்தது. இது பேராவூரணியில் சாலை விரிவாக்கம் செய்யும்பொழுது அந்த நிழல் குடை அகற்றப்பட்டது. அதன் பின்பு இதுநாள் வரை அந்த இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் . மழை காலங்களில் பேருந்து பயணிகள் . பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் . மற்றும் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இந்த இடத்தில் ஒரு பேருந்து நிழற்குடை அமைத்து கொடுத்தாள் பொதுமக்களுக்கும் . பள்ளி . கல்லூரி மாணவ. மாணவிகளுக்கும்வசதியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கூறுகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *