காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

காங்கயம் தாலுகா, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளக்காட்டுதோட்டம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், தனது வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலையில் வந்து பார்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, இறந்து கிடந்துள்ளது. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *