போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறை காடு மலை கிராமத்தில் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அணக்கரைப்பட்டி ஊராட்சி சிறைக்காடு மலை கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மலை வாழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அந்த பகுதியில் வசித்து வரும் மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்

அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பஸ் வசதி தெரு விளக்கு அமைத்தல் போதிய அளவு குடிநீர் வசதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.இதனைத் தொடர்ந்து சிறைக்காடு பகுதியில் போடிநாயக்கனூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகள் சேகரிக்கப்படும் குப்பை கிடங்கினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு குப்பைகள் அதிகளவு சேர்ந்த வண்ணம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்படுத்துமாறு சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

இந்த ஆய்வின் போது போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் அப்துல் முஸ்தபா நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் தாசில்தார் போடிநாயக்கனூர் சந்திர போஸ் தனி வட்டாட்சியர் ஆதி திராவிடர் நலம் கண்ணன் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்கத்தம்மாள் ஜெகதீஸ் சந்திரபோஸ் அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலர் பொட்டு முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *