மாதவரம் பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, கண்புரை பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மாதவரம் ஸ்ரீதர் இலவசமாக கண் கண்ணாடிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் விஜயமூர்த்தி, விஜயலட்சுமி, கலைத்தம்பி, மஞ்சுநாதன், தனசேகர், சசிகுமார், மஞ்சுளா, வனிதா, லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.