நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களுக்கு தடை விதித்து, பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
அதேபோன்று, புதுச்சேரி மாநில உணவு பாதுகாப்புத் துறையும் உடனடியாக கலர் அப்பளங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என FEDCOT INDIA – Consumer Movement, Puducherry (Karaikal) மற்றும் Consumer Confederation of India சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
பொதுமக்களின் உடல்நலனை பாதிக்கக்கூடிய செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் திடீர் ஆய்வுகள் நடத்தி, விதிமீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கலர் அப்பளங்களால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோரிக்கை விடுப்பவர்:
S. Sivakumar
BIS Trainer, Government of India
FEDCOT INDIA – Consumer Movement, Puducherry (Karaikal)
Consumer Confederation of India