தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தாலுகா, மூலனூர் அருகே கோட்டை மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை வந்து பார்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 25 ஆடுகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கிடந்துள்ளது. இதில் 12 ஆடுகள் உயிரிழந்தன. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்து ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. மீதமுள்ள ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இந்த சம்பவம் குறித்து இப்பகுதி கால்நடைத்துறையினர் மற்றும் மூலனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.