சின்னக்கண்ணுபுரம், ஜூலை 16: கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் கு. காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு சின்னக்கண்ணுபுரத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 14வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளி துரை மற்றும் மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக், பென்சில் பாக்ஸ், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. காமராஜரின் கல்விச் சேவையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவிந்தராஜ், நடராஜன், கண்ணன், மோகன், பரமசிவன், டேனியல், சுந்தர், சிவா, ஜான்சன், பென்வின், சந்தோஷ், சஞ்சய், சரவணன், ஆனந்தி, மாரி செல்வி, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிங் மேக்கர் காமராஜர் நற்பணி இயக்கம் சிறப்பாக செய்திருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *