கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம், வாங்கப்பாளையத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்நிகழ்வை வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியும் (CEO), மருத்துவருமான பிரபாகரன் கொடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
“அறம் செய்ய விரும்பு” மற்றும் போதை ஒழிப்போம் – வாழ்க்கையை வெல்வோம்”** என்ற கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், திரளான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இப்பேரணி வாங்கப்பாளையம் ரோட்டில் தொடங்கிய பேரணி, சர்ச் கார்னர், பழைய அரசு மருத்துவமனை,பசுபதீஸ்வரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,, லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை,பழைய பஸ் ஸ்டாண்ட், கரூர் பைபாஸ் ரவுண்டானா மற்றும் ஈரோடு ரோடு வழியாகச் சென்று ரெட்டிபாளையம் வடிவேல் ஈஸ்வரி திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
“வாங்க! ஒன்றுபடுவோம்! போதை ஒழிப்போம் – புதிய தமிழகம் உருவாக்குவோம்! இளைஞர்களைக் காப்போம்! தமிழகத்தை மேம்படுத்துவோம்!” என்ற எழுச்சிமிகு முழக்கத்துடன் நடைபெற்ற இப்பேரணி, கரூர் பகுதி மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.