செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 26
புழல் அடுத்த கதிர்வேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாணவ மாணவிகள் போலீசாருடன் இணைந்து நடத்தினர்.
இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஹரிகரன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த இந்த நிகழ்வில், பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய போதையை ஒழிப்போம் என்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து போதை தடுப்பு அவசியம் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இதில் அரிமா சங்க நிர்வாகி டாக்டர் சயீதா ஜெபின், ரவிக்குமார், கண்ணன், நடேச பெருமாள், முத்தமிழன், ஸ்ரீதர்,ராஜசேகர், ஜனார்த்தனன் மற்றும் உறுப்பினர்களும் பள்ளியின் முதல்வர் முத்துமகேஸ்வரி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.