கோவை 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வி.கே.வி.குழுமங்கள் சார்பாக கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கும் விழா வி.கே.வி. இல்லத்தில் நடைபெற்றது.
வி.கே.வி.நிறுவனங்களின் தலைவர் வி.கே.வி. சுந்தர் ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிர்வாக இயக்குநர் வி.கே.வி.எஸ். வினிஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்..
இதில் மனவளக்கலை மன்றம் தலைவர் வெள்ளியங்கிரி, உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் புலவர் அப்பாவு, இலவச ஐ ஏ எஸ் தேர்வு பயிற்சி மைய பேராசிரியர் கனகராஜ், எஸ் பி எம் குரூப்ஸ் தலைவர் பச்சைமுத்து, பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் மகேஸ்வரன், கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி பி டி ஏ தலைவர் பாரதி செல்வம், முன்னாள் ஆசிரியர் மாணிக்கம், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர்கள் மகேஸ்வரன், திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியர் சின்னராஜ், ஆர் ஆர் குரூப்ஸ் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்..
விழாவில்,10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி முக்கிய விருந்தினர்கள் பாராட்டினர்.
இதில், சோமையனூர், உச்சையனூர், 22 நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 360 மாணவ, மாணவிகளுக்கு கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது….
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.வி.சுந்தர் ராஜ், கடந்த 20 ஆண்டுகளாக தனது சொந்த நிதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கி வருவதாகவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி கே வி கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், முன்னாள் உறுப்பினர்கள் நாகராஜன், ஜெயந்தி, சோமசுந்தரம், ஆறுமுகம், கிருஷ்ணவேணி, குமாரசாமி, புஷ்பலதா, ஆனந்தன், திவ்யா, இந்திராணி, அம்சவேணி, அருண்குமார், சூர்யா என்கிற கே ஆர் தங்கவேல் உட்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…