தூத்துக்குடி, ஜூலை.27-

தூத்துக்குடி கடற்கரையை ஒட்டி முள்ளக்காடு பகுதியில் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கரில் 300க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகிறோம் இந்த தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்,
இந்த நிலையில் சுமார் 3000 ஏக்கரில் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளத்திற்காக சிப்காட் மூலம் நிலம் கையப் படுத்துவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிராக உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் வியாபாரிகள் ஆகியோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்,


இந்நிலையில்,உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை தனித்தனியாக அழைத்து சப் கலெக்டர் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார், அதில் மாற்று இடம் வழங்குவதாக கூறப்பட்டதை உற்பத்தியாளர்கள் ஏற்க மறுத்தனர்,


இதனை தொடர்ந்து உப்பளங்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் வைத்து, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் செயலாளர் சேகர்,தலைவர் மந்திரமூர்த்தி,பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ்,முகேஷ் சண்முகவேல், எல்.ஆர் சிவாகர், பாலசுப்பிரமணியன்,ஈ பால், அழகேசன்,சண்முகசுந்தர ராஜா, சண்முகநாதன்,ஸ்ரீராம்,பொன்ராம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலை அழிக்காமல் பாதுகாக்க வலியுறுத்தி,கடந்த திமுக ஆட்சி வழியில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தியும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரரை இன்று காலை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர்,

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த உப்பு உற்பத்தியில் ஈடுபடும் ஆண் பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தினர் முள்ளக்காடு பகுதி மீனவர்கள் உட்பட ஏராளமானோர் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *