தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவ பிரசாத் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட சிவ பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் 37வது காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்று கொண்டேன்.
போதை பொருள் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் அதுபோல பெண்கள் பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் காவல்துறையினருடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நான் இதுவரை மூன்று மாவட்டத்தில் பணியாற்றியுள்ளேன் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் அது போல பள்ளி அருகில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற சிவபிரசாத் கூறினார்.