கம்பம் நகரில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 8 ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பண்பாளர் நா.இராமகிருஷ்ணன் தலைமையில் கம்பம் வடக்கு நகர செயலாளர் எம்.சி.வீரபாண்டியன் கம்பம் தெற்கு நகர செயலாளர் சி.பால்பாண்டி ராஜா ஆகியோர் முன்னிலையில் அனுஷ்டிக்கப்பட்டது

இதன் பின்னர் கம்பம் வ.உ.சி. திடலில் இருந்து அமைதிப் பேரணியாக நகரின் பிரதான வீதிகளில் சென்று காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் முத்தமிழ் அறிஞர் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் திரு.இரா.பாண்டியன் தலைமை செயற்குழு உறுப்பினர் குருகுமரன் முன்னாள் கம்பம் நகர திமுக செயலாளர் மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன்
முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ் டி டி இளங்கோவன் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கம்பம் நகர் 33 வார்டு செயலாளர்கள் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *