தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உலக டேக்வாண்டோ ஹன்மடாங் (World Taekwondo Hanmadang) போட்டியில் இந்திய அணி சார்பாக கோவை துடியலூர் பகுதியில் ஆண்ட்லீ ப்ளோக் பெல்ட் அகாடமி நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் அகாடமி மாணவர்கள் பங்கு பெற்றனர்..
கடந்த 1 ந்தேதி கொரியா நாட்டில் உள்ள குக்கிவான் நகரில் நடைபெற்ற இதில் உலகம் முழுவதும் இருந்து 70 நாடுகளில் இருந்து சுமார் மூவாயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்..
இதில், ஜூனியர் பிரிவில் பூம்சே (Poomsae) மற்றும் கிக் பிரேக்கிங் (Kick Breaking) ஆகிய பிரிவுகளில் ஆண்ட்லீ ப்ளோக் பெல்ட் அகாடமி மாணவர்கள் ஐந்து வெண்கல பதக்கங்களும்,மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்ட்லீ அகாடமி பயிற்சியாளர் ஆனந்த் ஒரு வெண்கலமும்,பெற்று அசத்தியுள்ளனர்..
இந்நிலையில் ,பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்கள், விஸ்வேஸ்வரன்,கிஷோர்,ரத்தீஷ்,சஞ்சய் ஸ்ரீ,ரித்திக் பிரசாத்,மற்றும் பயிற்சியாளர் ஆனந்த் குமாருக்கு ஆகியோருக்கு விமான நிலையத்தில் பொதுமக்கள், பெற்றோர், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதக்கங்களுடன் வந்த வீரர்களை மலர்மாலை அணிவித்து,பொன்னாடை போற்றி கைதட்டி வரவேற்ற காட்சிகள் அனைவரையும் நெகிழச் செய்தன.
இந்த வெற்றி, இந்திய மற்றும் தமிழகத்தின் டேக்வாண்டோ விளையாட்டின் வளர்ச்சிக்கும், இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் முக்கியமான சாதனையாக இருப்பதாக பதக்கம் வென்று கோவை திரும்பிய ஆனந்த் குமார் தெரிவித்தார்…