தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒடைப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ அறிவுறுத்தலின்படி ஓடைப்பட்டி பேரூராட்சியில் மாபெரும் இரத்ததானம் நடைபெற்றது இந்த முகாமிற்கு மாவட்ட பொருளாளர் கவுதம் தலைமை வகித்தார் .
சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார் கம்பம் அரசு மருத்துவமனை ரத்த மருத்துவர் டி. பாரதி தலைமையில் செவிலியர்கள் மருத்துவக் குழுவினர் பங்கேற்று இரத்ததானம் பெற்றனர்
இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் ரத்ததானம் அளித்தனர். இது முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரின் தனி செயலர் ரகுபதி மற்றும் நேர் முக உதவியாளர் ஹஸீப் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.