S.செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்
9385856800
நாகப்பட்டிணம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானிக்கோட்டகம் சோதனைச்சாவடி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சுதாகர், ஜெகன், சக்திகுமார், அருண்பாண்டியன், பூபதி மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 நான்கு சக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் மற்றும் 2 மோடம்கள் கைப்பற்றப்பட்டன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது